SUPER SPEED USB

SUPER SPEED USB 
நொடிக்கு 10 ஜி.பி. பிட்ஸ் வேகம்
யு.எஸ்.பி. 3 ஐ வேகமாக அறிமுகப்படுத்தி வருபவர்கள், அடுத்த யு.எஸ்.பி. 3.1ன் வேக வரையறையை அறிவித்துள்ளனர். இதன் வேகம் நொடிக்கு 10 கிகா பிட்ஸ் ஆக இருக்கும். யு.எஸ்.பி. 3ன் வேகத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். வேகத்துடன் இதன் மின்சக்தி பரிமாற்றமும் 100 வாட்ஸ் ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இந்த புதிய மின் பரிமாற்றத்தினைப் புரிந்து கொண்டு, தான் இணைக்கப் பட்டுள்ளது தொலைக்காட்சிப் பெட்டியா அல்லது வேறு டிஜிட்டல் சாதனங்களா என்பதனை உணர்ந்து செயல்படுத்த முடியும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வரையறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்படும் போலத் தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள யு.எஸ்.பி. 3 ட்ரைவ்கள், யு.எஸ்.பி. 3.1 க்கு உயர்த்திக் கொள்ள முடியாது.மேலும் டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பவர்கள், யு.எஸ்.பி. 3.1க்கேற்ற வகையில் சிப் செட்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால், யு.எஸ்.பி. 3.1 வகை ப்ளாஷ் ட்ரைவ்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள், முன்பு வந்த ப்ளாஷ் ட்ரைவ்களின் செயல்பாட்டினை ஏற்றுச் செயல்படும்.
யு.எஸ்.பி. 3.1 ல் இயங்கும் சாதனங்களும், ப்ளாஷ் ட்ரைவ்களும் வரும் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில்தான், மிக அதிக அளவில் எங்கும் பயன்படுத்தப்படும். இதற்கிடையே, இதே தொழில் நுட்பத்தில் போட்டியாகக் கருதப்படும் தண்டர்போல்ட் 2 தொழில் நுட்பம் இந்த ஆண்டின் இறுதியிலேயே கிடைக்கும் என இண்டெல் அறிவித்துள்ளது. இதனுடைய வேகம் நொடிக்கு 20 ஜிபி பிட்ஸ் ஆகும். இருப்பினும், யு.எஸ்.பி.3.1 மக்களுக்கென வருகையில், அதுவே அனைவராலும் விரும்பப்படும் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதற்கிடையே, யு.எஸ்.பி. 3.1 தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயார் செய்திடும் நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் பயிற்சி கருத்தரங்குகள், இந்த ஆண்டே தொடங்கி பல நாடுகளில், இந்தியா உட்பட, நடக்க இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

100 பயனுள்ள Run command rundefined